2018-19 கல்வியாண்டுக்கானபிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகியுள்ளன.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதிய நிலையில்,91.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் மாணவர்கள் 88.57%, மாணவியர் 93.64%. வழக்கம் போல் தேர்ச்சியில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம்.
தமிழகத்தில்45 சிறைக்கைதிகள் தேர்வு எழுதிய நிலையில், அதில் 34 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரையில் 2,692 பேர் தேர்வு எழுதினர். அதில் 2,404 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி விகிதத்தில்மாவட்ட அளவில், 95.37% பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.95.23% பெற்று ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடமும், 95.15% பெற்று பெரம்பலூர் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது. காரைக்கால் மாவட்டம், 84.87% பெற்று கடைசி இடத்தைப் பெற்றுள்ளது.
மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்:-
திருப்பூர் : 95.37 சதவீதம்
ஈரோடு : 95.23 சதவீதம்
பெரம்பலூர்: 95.15 சதவீதம்
கன்னியாகுமரி - 94.81%
திருநெல்வேலி - 94.41%
தூத்துக்குடி - 94.23%
ராமநாதபுரம் - 92.30%
சிவகங்கை - 93.81%
விருதுநகர் - 94.44%
தேனி - 92.54%
மதுரை - 93.64%
திண்டுக்கல் - 90.79%
ஊட்டி - 90.97%
திருப்பூர் - 95.37%
கோயம்புத்தூர் - 95.01%
ஈரோடு - 95.23%
சேலம் - 90.64%
நாமக்கல் - 94.97%
கிருஷ்ணகிரி - 86.79%
தருமபுரி - 89.62%
புதுக்கோட்டை 90.01%
கரூர் - 94.07%
அரியலூர் - 89.68%
பெரம்பலூர் - 95.15%
திருச்சி - 93.56%
நாகப்பட்டினம் - 87.45%
திருவாரூர் - 86.52%
தம்ஞ்சாவூர் - 91.05%
விழுப்புரம் - 85.85%
கடலூர் - 88.45%
திருவண்ணாமலை - 88.03%
வேலூர் - 85.47%
காஞ்சிபுரம் - 89.90%
திருவள்ளூர் - 89.49%
சென்னை - 92.96%
காரைக்கால் - 84.87%
புதுச்சேரி - 91.22%