பிளஸ் 2 முடித்த மாணவர்களே... மதிப்பெண் குறைவாக இருக்கிறது என, கவலை வேண்டாம். வெறும் தேர்ச்சி பெற்றாலே, ஏராளமான படிப்புகள் உள்ளன



பிளஸ் 2 முடித்த மாணவர்களே... மதிப்பெண் குறைவாக இருக்கிறது என, கவலை வேண்டாம். வெறும் தேர்ச்சி பெற்றாலே, ஏராளமான படிப்புகள் உள்ளன. 'பெயில்' ஆனாலும் பிரச்னையே இல்லை. ஜூனில் நடக்கும் சிறப்பு தேர்வில் பங்கேற்று, எளிதாக தேர்ச்சி பெறலாம். வெறும் மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை என நினைக்கவேண்டாம்; ஏராளமான படிப்புகள் உள்ளன; சுய தொழிலும் செய்யலாம். எனவே, குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களையோ, 'பெயில்' ஆன மாணவர்களையோ பெற்றோர் கடிந்து கொள்ளாமல், அவர்கள் மனதைத் தேற்றி, எதிர்காலம் சிறப்பாக அமைய வழி செய்ய வேண்டியது அவசியம்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நேற்று வெளியான நிலையில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், இன்ஜினியரிங், மருத்துவம் படிப்புகளில் சேர்வர். அதே நேரம், குறைவான மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, என்ன வாய்ப்புகள் உள்ளன என்பதை, மாணவர்களும், பெற்றோரும் தெரிந்து கொள்வது அவசியம்.

35 மதிப்பெண்ணே போதும்
சென்னை பல்கலையின், தேர்வு கட்டுப்பாட்டு முன்னாள் அதிகாரியும், ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லுாரி முதல்வருமான திருமகன் கூறியதாவது:பிளஸ் 2 தேர்வில், எவ்வளவு மதிப்பெண் பெற்றிருந்தாலும், மாணவர்களும், பெற்றோரும் கவலையே பட வேண்டாம். அனைத்து கலை, அறிவியல் பட்டப் படிப்புகளுக்கும், பிளஸ் 2 தேர்ச்சி மட்டுமே போதும்.

உளவியல் ஆலோசகர் கதிரவன்

அரசு மற்றும் உதவி பெறும் கல்லுாரிகளில், 'சீட்' கிடைக்கா விட்டால், தனியார் கல்லுாரிகளில், நிச்சயம் இடம் கிடைக்கும்.எவ்வளவு மதிப்பெண் உள்ளதோ, அதற்கேற்ற பட்டப்படிப்பில் சேரலாம். அந்த படிப்பின் வழியே, அரசு துறை வேலைவாய்ப்பு தேர்வுகள் எழுதி, அரசு அதிகாரி ஆகலாம்.மொழி சார்ந்த படிப்புகளுக்கு, எல்லா மாணவர்களுக்கும், கல்லுாரிகளில் இடம் கிடைக்கும்.

உளவியல் ஆலோசகர் கதிரவன்

தமிழ், ஆங்கிலம் என, மொழியியல் முடித்தவர்களுக்கு, அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. இதற்கு, பிளஸ் 2 மதிப்பெண், ஒரு தடையாக இருக்காது.ஊடகங்கள், நாளிதழ் கள், விளம்பர துறைகளில், மாணவர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. அந்த பாடங்களையும் தேர்வு செய்யலாம்.

பட்டப் படிப்புக்கு, கட்டணம் செலுத்த முடியாதவர்கள், எளிய முறையில், வங்கிகளில், கல்வி கடன் பெறலாம்.ஒரு மாணவருக்கு, ஆண்டுக்கு, 2,000 ரூபாய் வரை தான் வட்டி வரும். படிப்பு முடித்து, வேலைக்கு சென்ற பின், கடனை, மாத தவணையாக செலுத்தலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

40 - 45 போதுமே!

அண்ணா பல்கலையின், இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில் சேர்வதற்கு, பிளஸ் 2 தேர்வில், பொது பிரிவு மாணவர்கள், 45 சதவீதம் மதிப்பெண் பெற்றால் போதும். மற்ற பிரிவு மாணவர்கள், 40 சதவீதம் மட்டும் பெற்றாலே போதுமானது.அவர்கள், ஏதாவது ஒரு, இன்ஜி., கல்லுாரியில், பி.இ., அல்லது, பி.டெக்., இன்ஜினியரிங் படிப்பில் சேரலாம். தமிழக அரசின், கவுன்சிலிங் வழியாக இட ஒதுக்கீடு அடிப்படையில், இந்த இடங் பெறலாம்.

கலைக்கு, 35 போதும்

பிளஸ் 2வில், வெறும் தேர்ச்சி மதிப்பெண்ணான, 35 மதிப்பெண் மட்டும் எடுத்தால் கூட, ஏதாவது, ஒரு பட்டப்படிப்பில்சேரலாம். ஒவ்வொரு படிப்புக்கும், அதற்கேற்ற வேலைவாய்ப்புகள் உள்ளன.

பி.ஏ., - பி.எஸ்சி., - பி.பி.ஏ., உள்ளிட்ட, இளநிலை அறிவியல் மற்றும் கலை படிப்புகளில் சேர முடியும்.அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகள், தனியார் கலை கல்லுாரிகளில், விண்ணப்ப
பதிவு துவங்கியுள்ளது. மதிப்பெண்ணை தர வரிசைப்படுத்தி, மாணவர்களுக்கு, பட்டப்படிப்பு சேர்க்கை வழங்கப்படுகிறது.

பிளஸ் 2 தேர்ச்சி மட்டும் பெற்றவர்கள், ஏதாவது, ஒரு பல்கலையில்,பட்டப்படிப்பு மட்டும் முடித்த பின், குரூப், 1, 2, 3 என, அரசு பணிகளுக்கான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் எழுதி, அரசு பணியில் சேரலாம்.

சட்டம், சி.ஏ.,வுக்கு, 45 போதும்

அதேபோல், அம்பேத்கர் சட்ட பல்கலையின், இணைப்பில் உள்ள, சட்ட கல்லுாரிகளில், எல்.எல்.பி., - எல்.எல்.பி., ஹானர்ஸ், பி.ஏ., - பி.பி.ஏ., - எல்.எல்.பி., போன்ற படிப்புகளில் சேரலாம். இதற்கு, பொது பிரிவினர், பிளஸ் 2வில், 45 சதவீதமும், மற்ற பிரிவினர், 40 சதவீதமும் மதிப்பெண் பெற்றால் போதும். வணிகவியல் மற்றும் கணக்கு பதிவியல் படித்தவர்கள், பிளஸ் 2 தேர்ச்சி மட்டும் பெற்றால் போதும். தொலைநிலையில், சி.ஏ., படிப்பும், கல்லுாரியில், பி.காம்., படிப்பும் படிக்கலாம்.

'டிப்ளமா'வுக்கு, தேர்ச்சி போதும்

மூன்றாண்டு பட்டப்படிப்பு சேராதவர்கள், பிளஸ் 2 தேர்ச்சி மட்டும் பெற்றிருந்தால், 'டிப்ளமா' இன்ஜினியரிங் படிப்புகளில், நேரடியாக, இரண்டாம் ஆண்டில் சேரலாம். இரண்டு ஆண்டுகளில் படிப்பை முடித்து, பி.இ., - பி.டெக்., போன்ற, இன்ஜினியரிங் படிப்புகளில், நேரடி