பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: வேலூர் மாவட்டம் கடைசி இடம்

             
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி விகிதத்தில் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 7082 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 88 ஆயிரம் பிளஸ் 2 மாணவர்கள் தேர்வை கடந்த மாதம் எழுதினர். மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த வாரம் முடிந்தன.

இதையடுத்து, இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வழக்கம்போல் இந்த முறையும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் தேர்ச்சி விகிதத்தில் வேலூர் மாவட்டம் 85.47% தேர்ச்சி பெற்று கடைசி இடத்தை பிடித்துள்ளது.

முதல் மூன்று இடம் பிடித்த மாவட்டங்கள்:
திருப்பூர் மாவட்டம்: 95. 37%
ஈரோடு மாவட்டம்: 95.23%
பெரம்பலுர் மாவட்டம்:95.15%