ரேங்க் முறையில் இல்லாததால் மன அழுத்தத்துக்கு ஆளாகும் மாணவர்களின், எண்ணிக்கை குறைந்துள்ளது.கடந்த, 2017 வரை, மாநில அளவில், மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்கள் என, 'ரேங்க்' முறையில் வெளியாகும். தேர்வு முடிவுகள் வெளியானதும் பள்ளிகளில் உள்ள தகவல் பலகைகளில் மதிப்பெணுடன் கூடிய தேர்வு முடிவுகள் ஒட்டப்படும். தவிர, மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள், மாவட்ட நுாலகங்களில் இணையதளம் மூலம் மதிப்பெண்கள் தெரிந்துகொள்ள மாணவர் கூட்டமும் அலைமோதும்.
இம்முறையில், மாணவர் மதிப்பெண் வெளிப்படையாகவே தெரிவிக்கப்பட்டு வந்ததால், மதிப்பெண் குறைந்த மற்றும் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மன அழுத்தம் அதிகரித்து தற்கொலை போன்ற விபரீத முடிவுகள் அதிகமாகவே இருந்தது. இதற்காக கடந்தாண்டு கிரேடு முறை அறிமுகம் செய்யப்பட்டது.ஆரவாரமில்லைஎவ்வித ஆராவாரமும் இல்லாமல் தேர்ச்சி சதவீத அடிப்படையில் மட்டுமே தேர்வுகள் வெளியிடப்பட்டன.
மாவட்டங்களில் தேர்ச்சி சதவீதம், பாடவாரியாக தேர்ச்சி சதவீதம், பள்ளிகள் வாரியாக சதவீதம் மட்டுமே வெளியிடப்பட்டன. அதேசமயம், மாணவர்கள், பள்ளிகளுக்கு மட்டுமே தனிப்பட்ட முறையில் மதிப்பெண்அனுப்பப்பட்டன.இதனால், பிற மாணவர்களுடன் மதிப்பெண் ஒப்பீடு என்பது வெகுவாக குறைந்துள்ளது.
ஆசிரியர், மாணவர், பெற்றோர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.மனநல மருத்துவர் சந்தியா கூறுகையில், ''ஆண்டுதோறும் தேர்வு முடிவுகள் வெளியாகும் சமயத்தில், உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படும். மாணவரிடையே 'கம்பேரிசன்' என்பது குறைந்துள்ளது.
முன்பெல்லாம், தேர்வு முடிவு வெளியானபோது, தேர்வில் தோல்வி, குறைந்த மதிப்பெண் என்ற காரணங்களுக்காக, ஒரே நாளில் குறைந்தது, 100 மாணவர்கள் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறுவர். இப்போது கணிசமாக குறைந்துள்ளது, ''என்றார்.'ரேங்க்' முறை இல்லாததால் குறைந்தது மன அழுத்தம்: பெற்றோர், மாணவர் உற்சாகம்